உங்களை அன்புடன் வரவேற்கிறேன் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்

Sunday, March 22, 2009

உஷார்!! மக்களே உஷார்!!! பம்பர் பரிசு

இறைவன் திருப்பெயரால்.

இரவு பணியின் அசதி நல்ல அசந்து தூங்கிக்கொண்டு இருந்தேன் மலை நேரம் அஸர் தொழுகைக்கு நேரம் பாதி கடந்து இருந்தது திடீர் என்று எனது mobile கைப்பேசியில் ஒரு SMS என்னவென்று பார்க்க உடனே ஒரு missed call
சற்று தலை தூக்கி என்ன வென்று பார்த்தேன் பார்த்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி 50.000 திர்ஹம் பரிசு Congratulation dear Costumer you Have won The Lottery Dh 50,000 Please back call என்று எழுதி இருந்தது திடீரென்று ஒன்னும் புரியல உடனே சம்பந்த பட்ட நபரின் கைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினேன் அவர் உடனே அரபி இங்கிலிஷ் ஹிந்தி என்று கேட்க நான் ஹிந்தியில் அவரிடம் பேசினேன் உடனே அவர் உங்களுக்கு 50,000 Dh பரிசு விழுந்து இருக்கிறது l அதை உங்கள் கணக்கில் வரவு வைக்க உஙகள் வ்ங்கியிம் கணக்கு எண் சொல்லுங்கள் என்ற உடனே எனக்கு புரிந்து விட்டது நீங்கள் யார் எங்கே இருந்து பேசுகிறீர்கள் என்ற கேள்வி மேல் கேள்வி கேட்டேன் இணப்பு உடன் துண்டிக்கபட்ட்து பிறகு நான் தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது இணைப்பு துண்டிக்கபட்டுவிட்டது இதிலிருந்து என்ன புரிகிறது என்றால் ஒரு மெகா மோசடி இப்படி நடக்கிறது இங்கு விபரம் புரியாதா அப்பாவிகள் இதில் சிக்கி பணத்தையும் நிம்மதியையும் நிறைய இழந்து இருப்பார்கள்,சமீபத்தில் கூட தமிழ்நாட்டில் இப்படி சில மோசடி நடந்ததை பத்திரிகை மூலமாக தெரிந்துகொண்டேன்.நாம் எப்பொதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் நாம் வெளியில் முக்கிய மான மக்கள் மிகந்த இடத்தில் இருக்கும் போது கைப்பேசியில் தேவை இல்லாதவை நமது குடும்பம் சார்ந்த ரகசியங்களை பேசக்கூடாது சமூக விரோதிகள் உங்களை கண்கானிக்க கூடும்
எனக்கு தெரிந்ததை எழுதி விட்டேன் இனிமேல் உங்கள் கருத்துக்களை தாராளமாக தெரிவிக்கவும்,
நன்றி

Thursday, March 19, 2009

அமீர வாழ் மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

இறைவன் திருப்பெயரால்.

அன்பார்ந்த சகோதரர்களே நாம் அனைவரும் தாய் தந்தை மனைவி மக்கள் என அனைத்து உறவுகளையும் பிரிந்து பொருளாதாரம் ஈட்டுவதற்கு தான் இங்கு (GULF)வ்ந்து இருக்கிறோம்.நமது லட்சிய கனவுகள் நிறைவு அடையும் வரை நேர்மையான வழியில் நமது உழைப்பு இருக்க வேண்டும்.பணத்தை விண் விரயம் செய்யாமல் சேமித்து வைக்கவும்.இளமைக்கு பிறகு முதுமை வரும் போது நாம் யாரிடமும் யாசகம் கேட்காமல் வாழவேண்டும்.அதற்க்கான வழிமுறையில் நாம் தெளிவான திட்டம் இருக்கவேண்டும். குறிப்பாக U.A.E. வாழ் சகோதரர்கள் இந்த நாட்டு சட்டதின் படி வாழவேண்டும்.வெளியே நாம் செல்லும் போது Meter taxi அல்லாது வேறு காரில் ஏறக்கூடாது வ்ழி பறி கொள்ளையர்கள் தங்களுடைய (உயிர்) பணம் பறிபோகும் அவலம் இங்கு நடக்கிறது.அறிமுகம் இல்லாத ஆட்களை தங்களுடைய காரில் ஏற்றவேண்டாம் போலிஸ் உங்களை கள்ள Taxi Service செய்கிறீகள் என்று சந்தேகப்பட்டு அபராதமும்.சிறை தண்டணை லைசென்ஸ் பறிபோகும்.
சாலைவிதிகளை சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும்.Red Signal விழும் போது த்டையை மீறி நடந்து சென்றால் Dh200(AJMAN) அபராதம் செலுத்த வேண்டும் வாகனம் ஓட்டும் போது கைப்பேசிகளை Cell Phone பேசுவதை தவிர்க்கவும் பெரும் விபத்துக்களை தவிர்க்கலாம். போக்குவரத்து விதிகளை சரியான முறையில் கடைபிடிக்கவும். பொது இடங்களில் குப்பை போடுவதை தவிர்க்கவும் மீறினால் அபராதம் கட்ட நேரிடும். எந்த லட்சிய கனவோடு நாம் இங்கு வந்து இருக்கின்றோம் அதை எல்லாம் வல்ல இறைவன் நிறைவேற்றி தருவான் என வேண்டியவனாக.
மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (அல்குர்ஆன்2:168)